பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்!

Report Print Nivetha in பிரித்தானியா

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது தற்போது பேரேழுச்சி எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், கையெழுத்து போராட்டம், மற்றும் இலங்கையின் இனவழிப்பு தொடர்பான பிரச்சாரம் போன்றன 10 டவுனிங் வீதியில் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த 26ஆம் திகதி தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் 22வது நாளான இன்று (19) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களும் பாராளுமன்ற உறுபினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, இலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகாம்களை மூடுமாறு கோரி இன்று கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

இப்போராட்டங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரையும் முன்னெடுக்கப்படவுள்ளதால் இந்த நாட்களில் ,பிரித்தானிய வாழ் தமிழர்களை திரளாக வருகைதந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

advertisement

Comments