பிரித்தானியாவில் இலங்கை தமிழ் பெண் மீது இனவாத தாக்குதல்

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் கடைக்காரர் ஒருவரின் முகத்தில் வாடிக்கையாளர் துப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளர் கேட்ட தரத்திலான சிகரெட் இல்லாமையினால் குறித்த நபர், கடைக்கார பெண் மீது துப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனவாதத்தை தூண்டும் வகையில் இவ்வாறு செயற்பட்டதாக தெரிய வருகிறது.

30 வயதான Christopher James Callaghan என்ற குறித்த நபர் கடையில் தவறாக நடந்துக் கொண்டுள்ளதுடன், கவுண்டரில் உள்ள பெண் முகத்தில் துப்பி செல்லும் காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளது.

Callaghan என்பவர் கடை ஊழியர்களிடம் கேட்ட தரத்திலான சிகரெட் அங்கில்லாமையினால் கடும் கோபமடைந்துள்ளார்.

இதனால் கடையின் ஊழியரான நிலானி நிழல்ராஜா என்ற இலங்கை பெண் குறித்த சிகரெட் இல்லை என்பதனை நிரூபிப்பதற்காக சிகரெட் வைக்கும் இடத்தை காட்டியுள்ளார். எனினும் குறித்த நபர் முகத்தில் துப்பியுள்ளார்.

சம்பவத்தில் ஆத்திரமடைந்த நிழல்ராஜா பொலிஸாரிடம் அறிவிப்பதற்கு முன்னர் கடையில் இருந்த பொருள் ஒன்றை எடுத்து எறிந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட Callaghan நேற்றைய தினம் செப்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை Callaghan ஏற்றுக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் நிழல்ராஜாவிடம் வினவிய போது, அவரது நடத்தைகளை தான் வெறுப்பதாகவும், அவர் மீண்டும் அங்கு வரக்கூடாதென நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட Callaghan 16 வாரங்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரை 35 நாட்களுக்கு சேவையை மேற்பார்வையிடுமாறும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 250 பவுண்ட் செலுத்துமாறு மாவட்ட நீதிபதி மிரியம் ஷெல்வே உத்தரவிட்டுள்ளார்.

Comments