லண்டன் தொடர் மாடி தீ விபத்து! தீவிரவாதிகளின் சதிச் செயலா?

Report Print Murali Murali in பிரித்தானியா

லண்டன் நகரில் தொடர் மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மேற்கு லண்டன் Latimer Road வீதியில் உள்ள 27 மாடிகளை கொண்ட Blaze engulfs தொடர் மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருந்தது.

குறித்த கட்டடத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட தீப்பரவல், விரைவாக அனைத்து தளங்களுக்கும் பரவியதை தொடர்ந்து கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளமையினால் அதில் தங்கியிருந்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட 30 பேர் வரையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மை காலமாக லண்டன் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்த சம்பவமும் தீவிரவாதிகளின் சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement