லண்டனில் பற்றி எரியும் 24 மாடி கட்டிடம்!- பலர் பலியான பரிதாபம்!

Report Print Samy in பிரித்தானியா

லண்டன் 24 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்ததைப் போலவே எரிந்து கொண்டிருக்கிறது.

இதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ கட்டுக்கடங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தைப் போலவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த விபத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும். 60க்கு மேற்பட்டோர் 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

எனினும் இவ்விபத்தில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதிய இணைப்பு

தீயின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், கட்டிடத்துக்குள் பலர் சிக்கியதாக கருதப்படுவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறைந்தது எழுபத்தி நான்குபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருபது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர்.