லண்டனில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிய மக்கள்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
advertisement

மேற்கு லண்டனில் அமைந்துள்ள 24 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரையில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பெருநகர் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கட்டடம் தீபற்றி எரிந்து கொண்டிருந்த போது, அனர்த்தத்தில் சிக்கியவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு போராடிய புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான இந்த போராட்டத்தின் போது, தங்கள் உயிரை காப்பாற்றுமாறு குறித்த நபர்கள் ஜன்னல் அருகில் நின்று உதவி கோரும் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

1974ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த குடியிருப்பு கட்டடம் அண்மையில் 8.6 மில்லியன் ஸ்ட்ரேலிங் பவுண்ட் செலவிடப்பட்டு மீள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கட்டடம் முழுமையான எரிந்துள்ளமை பிரித்தானிய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

advertisement