லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வான் - ஒருவர் பலி - 10 பேர் காயம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
advertisement

வடக்கு லண்டன் பகுதியில் கூட்டமாக நின்ற மக்கள் மீது வான் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கியே குறித்த வான் சென்று மோதியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Finsbury Park மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் குறித்த வெள்ளை நிற வான் மக்கள் மீது பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அவசர சிகிச்சை பிரிவினர் சென்றுள்ளனர். இந்த விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Seven Sisters வீதியின் ஒரு பகுதி தற்போது விசாரணைகளுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

advertisement