லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

Report Print Peterson Peterson in பிரித்தானியா

சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் மத்திய லண்டனில் உள்ள Marble Arch என்ற அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதுடன், பித்தானியாவின் நேரம் காலை 10.49 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Edgware சாலையில் அமைந்துள்ள இந்த 6 அடுக்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தீயை அணைப்பதற்காக வீரர்கள் 6 குழுக்களாக பிரிந்து கடுமையாக போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்பகுதியில் தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.