பிரித்தானிய மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு படுதோல்வியை சந்தித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பாரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் Ben Wallace எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள Daesh Takfiri குழுவுடன் இடம்பெற்ற மோதலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தோல்வியடைந்தது.

இதனால் பிரித்தானியாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒன்று சேர முடியாமையினால் பிரித்தானியாவில் தாக்குதல்களை நடத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா தற்போது பயங்கரவாத குழுக்களிடமிருந்து தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்தை தடுப்பதற்கு இன்னும் புரிதல் அவசியம் என Ben Wallace எச்சரித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்சிலோனாவில் வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத குழு அதன் மோசூல் கோட்டையை கடந்த மாதம் ஈராக் படைகளுடன் இடம்பெற்ற மோதலில் இழந்தது.

அத்துடன், சிரியாவின் தலைநகரான ராக்காவை வீழ்த்துவதற்கான சர்வதேச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் இன்னமும் அதிகரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் Wallace மேலும் குறிப்பிட்டுள்ளார்.