பிரிட்டனை 70 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி தாக்கும் அபாயம்!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

பிரித்தானியாவின் சில பிரதேசங்களில் மணிக்கு 70 மைல் வேகம் கொண்ட காற்றும் பெருமழையும் இவ்வாரம் இடம்பெறலாம் என கால நிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

நாளை செவ்வாய் இரவு முதல் புதன் காலை வரையிலான காலப் பகுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இத்தகைய கால நிலை மாற்றம் தோற்றம் பெறலாம் என இந்த எச்சரிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதனால் போக்குவரத்து தடைகளும் சில பகுதிகளில் மின்சாரத் தடைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

70 மைல் வேகம் கொண்ட காற்று வேல்ஸின் வடபகுதிலும் வட இங்கிலாந்திலும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் எதிர்வு கூறப்பட்டுள்ளன.

இர்மா புயல் தாக்குதலுடன் இக் கால நிலை மாற்றம் தொடர்புபட்டதல்ல எனவும் காலநிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Weather warnings in place as 70mph winds set to batter Britain
advertisement