ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை? பிரித்தானியாவில் நடந்த பரிதாபம்!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தையை சுத்தியல் வைத்து தாக்கி கொலை செய்த நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் Cristinela மற்றும் Bidhya Sagar வசித்து வந்துள்ளனர். Cristine-வுக்கு ஒரு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களின் பெயர் Gabriel மற்றும் Maria என்று கூறப்படுகிறது.

மேலும் Bidhya Sagar இக்குழந்தைகளின் தந்தையாகத்தான் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் வசித்து வரும் வீட்டில் ஒரு வயது குழந்தைகளான Gabriel மற்றும் Maria(தங்கை) சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உயிருக்கு போராடி வந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் Gabriel சிகிச்சை பலனின்றி பரிதாபமக உயிரிழந்துவிட்டதாகவும், Maria ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் அருகில் இருந்தவர்கள் கூறுகையில், சம்வத்தன்று Cristinela தன் குழந்தை, தன் குழந்தை என்று கத்திக்கொண்டே வீதியில் ஓடியாதாக கூறியுள்ளனர்.

மேலும் Cristinela தோழி ஒருவர் கூறுகையில், அண்மையில் Cristinelaவுடன் பேசியதாகவும், அவள் தான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால் நான் அவளை உற்று நோக்கி கவனித்ததில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.

Bidhya Sagar பற்றி கூறுகையில், அவர் மனகுழப்பத்தில் இருந்ததாகவும், அவரிடம் தினந்தோறும் பேசிவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் இது தன் குழந்தை இல்லை என்று குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குழந்தைகள் இருந்த வீட்டில் மர்ம நபர் ஒருவர் இருந்ததாகவும், பொலிசார் அப்பகுதிக்கு வந்தவுடன் அந்த நபர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொலிசார் இந்த கொலையை செய்திருப்பது Bidhya Sagar கத்தான் இருக்க முடியும் என்று சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Comments