இது என்ன உயிரினம்? அடையாளங்காண உதவுங்கள்

Report Print Dias Dias in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இர்மா புயல் தாக்கமுன்னர் டெக்சஸ் மாகாணத்தை ஹார்வி புயல் தாக்கியது.

அவ்வாறாக ஹார்வி புயல் வீசியபோது கடலில் கடும் கொந்தளிப்பு உருவாகியபோது கடல்வாழ் உயிரினங்களும் கரையை நோக்கி தள்ளப்பட்டன.

இந்தநிலையில் இதுவரை பார்த்திராத மர்மகடல்வாழ் உயிரினம் ஒன்றும் இறந்த நிலையில் இவ்வாறாக டெக்சஸ் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.

கூரியபற்கள் உருளை வடிவஉடலமைப்பை கொண்ட இந்த மர்ம உயிரினத்துக்கு நீண்ட வால்பகுதியும் உள்ளது.

இதுவரை இந்த உயிரினம குறித்து அறியப்படாததால் இது எந்த வகையான உயிரினம் என்பதை அடையாளங் காண்பதற்கு உயிரியலாளர்களிடம் உதவிகோரப்படுகிறது.

இந்த உயிரினம் குறித்து உங்களுக்குத்தெரியுமா? நீங்களும் அது குறித்து பதிவிடலாம்.

அதற்காக இது ஒரு பெரிய சைஸ் நெத்தலிமீன் என மட்டும் குறிப்பிட்டுவிடாதீர்கள்.