|
|
|
| Photo
|
|
| எதிர்க்கட்சிகளின் பொதுவான கூட்டணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது |
| [ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2009, 08:15.13 AM GMT +05:30 ] | |
 இலங்கையின் புதிய எதிர்க்கட்சி கூட்டணி இன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியகட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியே இன்று முற்பகல் இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. |
இது தொடர்பான உடன்படிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மங்கள சமரவீரவின் ஸ்ரீலங்கா சுதநதிர கட்சியின் மக்கள் பிரிவு, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு நிகராக எதிர்கட்சி ஒன்று இல்லாத நிலையில் இந்த கூட்டணியின் அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றில் இந்தக்கூட்டணி ஆளும் தரப்பிற்கு சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்றைய தினம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று முற்பகல் 11.30 மணிக்கு சுப முகூர்த்தத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் விசேட வாகனத் தொடரணி மூலம் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

|
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|