அவர் தேசிய நிதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரிய அளவிலான நிதிகளை வழங்கியிருப்பதாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கூட்டுறவு சங்க முகாமையளராக பணியாற்றி பாரிய நிதியினை மோசடி செய்து புலிகளுக்கு நிதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த காலகட்டத்தில், இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர் உணவுப் பொருட்களையும் வழங்கியதாக ஊகிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிசாரின் காவலில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்த பெறப்பட்ட தகவலை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து தமிழீழத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான கணக்காளர் விசாரணைக்கு உட்படுத்தப்படடுள்ளார்.
|