அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்தோனேசியாவில் வசித்ததாகவும், ஜகார்த்தாவின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து அவர்கள் வீசிய கடிதம் ஒன்றில் அவர்கள் இதனை தெரிவித்திருந்ததாக நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அலெக்ஸ் என அடையாளப்படுத்திய அகதிகள் குழுவின் தலைவரை முதன் முதலில் தொடர்பு கொண்ட போது அவரின் ஆங்கிலம் சிறப்பாக இருக்கவில்லை என செனடர் பீல்டிங் தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டு வாரங்களின் பின்னர், அவரது ஆங்கிலம் சிறப்பாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ், அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர்,அவர்களுக்கான செலவீனங்களுக்கான முரண்பாடுகள் எழுந்தததை அடுத்து அது அவுஸ்திரேலியாவில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, தமது கப்பலை அகதிகள் கடத்திச் சென்றதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்த போதும், அதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பலவீனமான குடிவரவு கொள்கையை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குறித்த அகதிகள் குழு ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தால், அவர்கள் வசித்த பிராந்தியத்திலேயே வசிப்பதற்கு உரித்துடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரின் வாதம் பொய்த்துப் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை தற்போது பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதேனும் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். |