Switch to
   
   
   
செய்தி
புலிகளுக்கு ஆயுதம் விநியோகம் தொடர்பில் கைதான சிங்கப்பூர் அரசியல்வாதியை விசாரணைக்காக அமெரிக்கா அனுப்ப ஏற்பாடு
[ புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 10:16.24 AM GMT +05:30 ]

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் இணை நிறுவனரான ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத  விநியோகம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் நாயுடு. கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை சிங்கப்பூர் பொலிஸார் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ததாக கூறி கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் தனது வீட்டில் வைத்து நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 29ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

நாயுடு மீது அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுக்காக அவர் தேடப்பட்டு வருகிறார். எனவே நாயுடுவை அமெரிக்க பொலிஸார் விசாரணைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

அவரை அமெரிக்காவுக்கு அனுப்பும் கோரிக்கை தொடர்பான மனு நாளை சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

நாயுடு மீது அமெரிக்காவில் உள்ள வழக்கு..

சீர்திருத்தக் கட்சியை நிறுவியர்களில் ஒருவர் நாயுடு. இவரும், இன்னொரு சிங்கப்பூர் வாசியான ஹனீபா உஸ்மான் என்பவரும் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை சப்ளை செய்துள்ளதே குற்றச்சாட்டாகும்.

இந்த வழக்கில் ஏற்கனவே உஸ்மான் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

57 வயதாகும் உஸ்மான், ஒரு ஆண்டுக்கு முன்பு பால்டிமோர் கோர்ட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 37 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.

கட்நத 2006ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை புலிகளுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கும் இடையே தரகராக செயல்பட்டுள்ளார் நாயுடு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது நாயுடுவை அமெரிக்காவுக்கு விசாரணைக்காக சிங்கப்பூர் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அங்கு விசாரணையை சட்டப்பூர்வமாக தனது கட்சிக்காரர் சந்திப்பார் என்று நாயுடுவின் வழக்கறிஞரான ஜோனதன் டேன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பால்ராஜ் நாயுடு தீவிரவாதி அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு கட்சி துணை நிற்கும் என்று சீர்திருத்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ]
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ]
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] []
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement