|
|
|
| சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்க இலங்கையுடன் ஒப்பந்தம் |
| [ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009, 03:18.28 PM GMT +05:30 ] |
சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் இலங்கை அராசங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. |
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளினால் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் கூட்டாக இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால அர்ப்பணிப்புடன் கூடிய திட்டங்களின் மூலமே சட்டவிரோத குடியேறிகளின் செயற்பாடுகளை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியேற்றுதல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய செயற்பாடுகளை மட்டுப்படுத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் போகொல்லாகம தெரிவித்துள்ளார். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|