Switch to
   
   
   
செய்தி
  • Photo
பிரான்சின் மனிதநேயப் பணியாளர்கள் மீதான இறுதிக் கட்ட விசாரணையும், தீர்ப்பும்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 05:19.34 AM GMT +05:30 ]

கடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன.

26ம் திகதி நடைபெற்ற விசாரணையில் அரசதரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றங்கள் பற்றியும் தெரிவித்திருந்தார்.

தமிழீழம் என்ற ஒரு தனியரசுக்கான போராட்டத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரான்சில் கடுமையாக பணியாற்றியதும் அந்த போராட்டத்திற்கு ஏனைய நாடுகள் போல இங்கும் மக்களிடம் நியாயத்திற்கு புறம்பாக நிதி பெற்று வழங்கியிருந்தார்கள் என்றும், அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பினர் என்றும் அவர்கள் சில நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பினர்கள் என்பதும் இவர்களை இந்தியாவும், இலங்கைம் முற்றுமுழுதாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் புலிகள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றும், அவர்கள் புதிய வடிவில் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்தெழுந்து வருவது போல வருவார்கள் என்றும், அவர்களுடைய மண்ணில் 1200 மேற்பட்ட கரும்புலிகள் தாக்குதல் செய்வதற்கு கட்டளைக்காக காத்திருப்பதாகவும் இவ் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி இங்கு வாழ்கின்ற சில தமிழர்கள் அமைப்புக்கெதிராக சாட்சியளித்திருப்பதாகவும் இந்திய, இலங்கை அரசின் கூட்டு முயற்சியின் பொய்யான பிரசாரங்களுக்கு வலுவூட்டும் வகையில் இன்னும் பல உண்மைக்கு புறம்பான பல செய்திகளையும் தமிழ் மக்களின் நியாயமான உரிமை போராட்டத்திற்கெதிராகவும் அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடாத்திய தமிழீழ நிழல் அரசினை கொச்சைப்படுத்தும் வகையிலும் குற்றத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக குற்றம் சாட்டப்பட்டு இத்துடன் இரண்டரை வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் திரு. ந. மதிந்திரன் உட்பட ஏனைய 23 பணியாளர்களுக்கும் முறையே 7 வருடம், 5 வருடம், 4வருடம், 3வருடம் 6 மாதங்கள் என்ற தண்டனையை வழங்குமாறு கேட்டு தனது வாதத்தினை நிறைவு செய்திருந்தார்.

27, 28ம் திகதி குற்றம் சாட்டப்பட்ட பணியாளர்களின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தலைமை தாங்கிய சட்டத்தரணி பிக்குவா அவர்கள் தனது நீண்டவாதத்தினை 2 மணிநேரம் நடாத்தியிருந்தார். (இவர் கடந்த 1985ம் ஆண்டு காலப்பகுதி முதல் இன்று வரை அகதிகளாக இங்கு வரும் தமிழர்களுக்கு உதவி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தமது வாதத்தினை முன்வைத்திருந்தனர். 20.30 மணிக்கு முதல்நாள் முடிவடைந்தது.

28 ம் திகதி தமிழர் ஒருங்கிணைப்புக்கு சார்பாக வாதடிய பிரபல்யமான சட்டத்தரணியும், முன்னாள் மனிதவுரிமைகள் அமைப்பின் தலைவருமாகிய சட்டத்தரணி Me Eric LEPINE  அவர்களின தனது வயது முதிர்ந்த நிலையிலும் தனது நீண்ட அனுபவ முதிர்ச்சியினை பேச்சின் மூலம் வழங்கியிருந்தார்.

அவர்தனது வாதத்தில் சர்வதேசத்தினதும், பிரான்சு நாட்டினது கடந்த கால நிகழ்கால போராட்டங்களையும், மனிதநேயப்பணிகள் பற்றியும், இந்த நாட்டில் தடைசெய்யப்பட வேண்டிய பல செயற்பாடுகள் தடையின்றி நடந்து கொண்டிருப்பதும் அவ்வாறு அவர்கள் செயற்படும் போது ஒரு அல்லல் பட்டு அகதிகளாக வந்த இந்த மக்கள் தன்னுடைய மக்களுக்கு உதவுவதை மறுப்பது எவ்வாறு நியாயமாகும் என்று கேள்வியையும் இன்னும் பற்பல நியாயமான கோரிக்கையாக முன்வைத்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட சார்பில் 12 வரையிலான சட்டத்தரணிகளும், உதவியாளர்களும் பணியாற்றியிருந்தனர்.

இறுதியாக பிக்குவா அவர்கள் தனது இறுதியான வாதத்தினை தெரிவிக்கும்படி பிரதம நீதியரசர் கூறியதற்கமைய வழக்கு விசாரணையின் போது மொழிபெயர்ப்பாளர்கள் விட்ட தவறினை சுட்டிக்காட்டியிருந்ததுடன். பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பணியாளராக கைதுசெய்யப்பட்ட சாந்தன் அவர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினையும், அவரின் மனிதாபிபமான பணியை நீதிமன்றம் பராட்டி வழங்கிய தீர்ப்பையும் நீதிமானுக்கு தெரியப்படுத்தி அந்த தீர்ப்பின் பத்திரங்களையும் வழங்கியிருந்ததோடு, தமிழ் மக்கள் தமக்கொரு நாடு தேவையென்பதையும், அந்த தேசத்தில் தான் தாமும் தமது சந்தோசமாக வாழமுடியும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

எத்தனை தடைகளை எவர் போட்டாலும் அவர்கள் தமது இலட்சியத்தை அடைய எந்த வடிவத்திலாவது சென்று குறிக்கோளை அடைவார்கள் என்றும் கூறிப்பிட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைகளை விலகிக்கொள்ளுமாறும், திரு. ந. மதிந்திரன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பணியாளர்களிடமும் தமது இறுதி கருத்துக்களும் கேட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் உண்மையையும், தமிழ்மக்களின் நியாயமான போராட்டத்தினைப்பற்றி வழக்கின் இரண்டாவது வாரத்தில் சாட்சியமளிக்க வந்திருந்த அமெரிக்காவின் பிரபல்ய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைப் பேச்சாளருமாகிய திருமதி. கரன் பார்க்கர் அவர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளரும், பேராசிரியரும், செவிலியர் விருது பெற்றவரும் கடந்த ஐரோப்பிய தேர்லில் போட்டியிட்டவரும் தமிழின உணர்வாளரும், எழுத்தாளரும் பேராசிரியருமாகிய யூலியா என்றழைக்கப்படும் திரு. சுகிர்தராஜ் அவர்களும் தங்களது விரிவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் தமிழ்மக்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு பிற்பாடு தமிழ்மக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் மட்டுப்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் மக்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது.

பல மக்களின் முகங்களில் ஒரு வேதனையையும், நல்லதொரு தீர்ப்பினை பிரான்ஸ் நீதி வழங்கும் என்ற கருத்தையும் தெரிவித்ததோடு அரசதரப்பு வக்கீலாக வாதாடியவர் ஒரு இளையதலைமுறையை சேர்ந்தவராக இருந்ததையும், அவரின் வாதத்திறமையை வியப்புடன் அவதானித்ததையும் உண்மைக்கு புறம்பான அவரின் குற்றத்தாக்குலுக்கும், சாடலுக்கும் எமது சந்ததியும் ஒரு காரணமாகிவிட்டது என்றும் அங்கு வந்திருந்த பெரியவர்கள் வளர்ந்து வரும் தமது குழந்தை இனி எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு அக்கறையின்றி இனிமேலும் இருப்போமாயின் வரலாற்றில் எமது பிள்ளைகளும் பயங்கரவாதிகள் என்ற அவப்பெயரோடு தான் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அங்கலாய்த்ததை காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இழந்து போன தமது தாய் மண்ணினை மீட்பதற்காக எமது மக்களால் மேற்கொள்ளப்பட்ட நியாயமான தர்மப் போராட்டமும், சர்வதேச சட்டத்திற்கமையவே நடாத்தப்பட்டது என்பது உலகம் முழுவதும் அறிந்து கொண்ட மாபெரும் உண்மையாகும்.

இந்த நியாயமான போராட்டத்திற்கு சர்வதேசம் உதவவேண்டியதே உண்மையான அடிப்படையாகும். ஆனால் அதை மறுத்து தனது அரசியல், பொருளாதார நலனுக்காகவும், அரசுகளுக்கு அரசுகள் வைத்திருக்கும் உறவுகளுக்காகவும் பல உண்மைகளும், உயிர்களும் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன.

இந்தவகையில் மனிநேய அடிப்படையில் பிரான்சில் பணியாற்றிய மனிதநேயப் பணியாளர் தனது மக்களுக்கு அல்லும் பகலும் தம்மை உறுத்தி பணியாற்றியதால் அவர்களுக்கு கிடைத்த பரிசு பயங்கரவாதிகள், அதற்கு துணை போனவர்களை என்றுமே எமது சமுதாயம் மறக்காது.

எனவே இவர்களுக்கான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி பி.பகல் 13.00 மணிக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
"அகம் புலம் தமிழர் வாழ்வியல் மாநாடு" சிறப்புற வாழ்த்துகின்றேன்: கி.வீரமணி
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:55.06 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டியக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். [மேலும்]
ஈழத் தமிழ் மக்களை மீட்டுச் சேர்க்க வேண்டிய மாபெரும் பணியினை நாம் மேற்கொள்ளவேண்டும்: பழ.நெடுமாறன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:52.36 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
உலகத் தமிழினம் தமிழினக் காப்பில் உடன் கவனம் செலுத்த வேண்டும்: காசி ஆனந்தன்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 11:41.45 AM ] []
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற கவிஞர் காசி ஆனந்தன் தன் சிறப்பு  வாழ்த்தறிக்கை  ஒன்றினை வெளியிட்டிருந்தார். [மேலும்]
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற வாழ்த்துக்கின்றோம்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 10:13.19 PM ] []
உ.த.ப. இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மாநாடு சிறப்புற நடைபெற ஹம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா ஆறுமுக பாஸ்கரகுருக்கள், ஜேர்மனி அருட்திரு அந்தோனி பெர்னாண்டோ பெனற் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விமேம்பாட்டு உதவி நிதி கோரிக்கை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 08:37.04 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகானாடினை முன்னிட்டு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் ஐரோப்பிய ஒன்றியம் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும்.. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement