வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன்குறித்த ஜனாதிபதியின் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,
தற்போது மீள்குடியமரும் மக்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 50 ஆயிரம் ரூபாவாக டிசெம்பர் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.
வன்னியில் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பை தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலைமையிலான அரசும், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அவர்களை வரவேற்று சகல வசதிகளையும் செய்துள்ளதை இம்மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
ஆரம்பத்தில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரமாக இருந்த நிவாரணக் கிராமங்களில் வசித்த மக்களது தொகை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு அரசின் நேர்மையான, தூய்மையான மீள்குடியேற்றக் கொள்கையே காரணமாகும்.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாகவும் நாம் மீள் குடியேற்றினோம்.
இன்றும் பல நாடுகளில் அகதி முகாம்கள் பல வருடங்களாகக் காணப்படுகின்றன. அம் மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். ஆனால் எமது நாட்டில் அகதிகள் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மீன்பிடி வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
|