|
|
|
| Photo
|
|
| பிரபாவின் படங்களை கிழித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு: சீமான் ஆதரவாளர்கள் 3 பேர் கைது |
| [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2009, 03:28.55 PM GMT +05:30 ] | |
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் வைத்திருந்த பிரபாகரனின் படங்களை இளங்கோவன் தலைமையில் சென்ற காங்கிரஸ் குழுவினர் கிழித்தெறிந்ததையடுத்து அன்று இரவு 12 மணியளவில் இளங்கோவன் வீட்டின் மீது 3 பெற்றோல் குண்டு வீசப்பட்டது. |
இது பற்றி தெரியவருவதாவது:-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பிரபாகரனின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இளங்கோவன் தலைமையில் அவ்விடத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினர் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் பிரபாகரனின் பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இச்சம்பவத்தையடுத்து நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.
நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் சென்று வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.
அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அடையார் பொலிஸார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50 க்கும் மேற்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் பின்னர் பொலிஸார், சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்ற நாம் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|