Switch to
   
   
   
செய்தி
தமிழர்களும், முஸ்லிம்களும் நாட்டை ஆட்சிக் செய்யக் கூடிய அரசியல் பின்னணி உருவாக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2009, 03:52.11 AM GMT +05:30 ]
தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் நாட்டை ஆட்சி செய்யக் கூடிய வகையிலான ஒர் அரசியல் பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
200 வருடங்களுக்கு பின்னர் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக தெரிவு செய்யப்பட்டதனைப் போன்று, இலங்கையிலும் தமிழ் முஸ்லிம்களும் ஆட்சி பீடமேறக் கூடிய வகையில் அரசியல் சூழ்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு பயங்கரவாதமோ அல்லது பிரிவினைவாதமோ தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் தொடர்பான சகல கட்டகளையும் தாமே இட்டதாகவும், யுத்தம் வெற்றியடைந்த பின்னர் நாட்டில் உள்ள மின் கம்பங்களில் தங்களுடைய படங்களை சிலர் கட்சிப்படுத்தி தங்களை பிரபல்யப்படுத்த முயற்சி மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த வெற்றயின் பின்னர் படைத் தளபதிகளுக்கு வழங்கப்படவிருந்த கலாநிதிப் பட்டங்களை வழங்கக் கூடாது என ஜனாதிபதி கடித மூலம் கொழும்புப் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அறிவித்ததாக, ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சகல சலுகைகளுடனும் இன்னும் ஒன்றரை வருடத்திற்கு இராணுவ உயர் பதவியை வகித்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாட்டை நல்வழிப்படுத்தும் நோக்கில் தாம் அரசியலில் களமிறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement