|
|
|
| ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதுவதன் மூலம் வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள முடியாது: ரணில் |
| [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2009, 03:59.29 AM GMT +05:30 ] |
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதுவதன் மூலம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
வரிச் சலுகைத் திட்டத்தை தொடர்ச்சியாக பாதுகாப்பதற்கே அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2005ம் ஆண்டு முதல் குறித்த வரிச் சலுகைத் திட்டத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், ஊடக சுதந்திரம், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் போன்றவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் நிச்சயமாக இலங்கைக்கு நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டால் வழக்குத் தொடரப்படும் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றிலா அல்லது வேறும் நீதிமன்றிலா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். உலக வர்த்தக மையத்திடம் இது குறித்து அறிவிப்பதன் மட்டுமே அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும், இதன் மூலம் பாரியளவு சாதகமான பிரதிபலன்களை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். வரிச் சலுகைத் திட்டம் நீட்டிக்கப்பட வேண்டுமாயின் ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் அமர்த்தப்பட வேண்டுமென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
|
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|