அவர் அரசாங்கத்துடன் இணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றால் அடுத்து வரும் அரசாங்கத்தில் பிரதமமந்திரி பதவி வழங்கப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள பலர் தம்மை சந்தித்து பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியை விட்டு தாம் விலகப்போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தாம் எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எஸ்.பி. திஸாநாயக்க கடந்த 19 ஆம் திகதி எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
எஸ.பி. திஸாநாயக்கவை ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அம் முயற்சி கைகூடாததன் காரணமாக அவர் ஐ.தே.க. மீது கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதை நினைத்து அரசுத்தரப்பினர் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸாநாயக்க ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுடன் சில காலத்திற்கு பேசாமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எஸ்.பி திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ள அமைச்சர் பதவி மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சி மாறுவது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே எஸ்.பி ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டு விலகுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
|