|
|
|
| ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு தரப்பிலும் கட்சித் தாவல்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:43.46 AM GMT +05:30 ] |
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு கட்சிகளிலும் கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கும் தாவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சித் தாவல்களுடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதித் தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு தாவும் உறுப்பினர்களுடனான இணைப்பு நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பத்து முக்கிய அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேர் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான செயற்பாட்டாளர் ஒருவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
|
| Sponsor |  | | Advertisements |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ] |
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்] |
| முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ] |
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ] |
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்] |
| விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ] |
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்] |
| புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ] |
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்] |
|
|