Switch to
   
   
   
செய்தி
ஐ.தே.க.வின் கூட்டத்திற்கு கல்வீச்சு; கூச்சலிட்டு குழப்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 02:08.18 AM GMT +05:30 ]
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வட கொழும்பு ஐ.தே.க. அமைப்பாளருமான ரவி கருணாநாயக்கவின் கூட்டத்தில் இனந்தெரியாத குழுவொன்றினால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் தெவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்ததாவது:-

வடகொழும்பு ஐ.தே.க. அமைப்பாளராக அண்மையில் கட்சித் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட எனக்கு நேற்று மாலை மாதம்பிட்டிய சன சமூக நிலையத்துக்கருகில் வரவேற்பு வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக நான் நேற்றுப் பிற்பகல் சுமார் 3 மணியளவில் சென்ற சமயம் மேடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நான் மேடையில் பேச எழுந்ததும், இனந் தெரியாத ஒரு குழுவினர் கூச்சலிடத் தொடங்கினர்.

இதையும் பொருட்படுத்தாது நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அக்குழுவினர் மேடையின் மீது கல் வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

குழப்பவாதிகள் கூச்சலிட்டும் கல் வீச்சுத் தாக்குதல்களை நடத்தியும் எமது கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் நாம் எமது கட்சியைச் சேர்ந்த சகோதரர்களும் கூட்டத்தை தொடர்ந்து மாலைவரை நடத்தினோம்.

இக் கூட்டத்தைக் குழப்ப முயன்ற கும்பல்கள் யாரென்பது பற்றி இதுவரை தெயாது. எனினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் அதிகரித்துள்ளதை சகிக்க முடியாத ஒரு சிலரினாலேயே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆரம்ப கட்டத்திலேயே நாம் இவ்வாறு அச்சுறுத்தப்படுகின்றோமென்றால் எதிர்வரும் தேர்தலில் முகம் கொடுப்பதற்கு அவர்கள் அச்சப்பட்டிருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
 
   
 
 


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்