|
|
|
| யுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009, 04:36.43 AM GMT +05:30 ] |
யுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
யுத்த வெற்றி தொடர்பில் முக்கிய பங்காற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவா அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவா என்பது குறித்து சிங்கள மக்களே சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளாh. இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, மா, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே கிடைக்கப் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மரக்கறி வகைகள், மீன் போன்றவற்றை தாம் நீண்ட காலமாக காணவில்லை என இடம்பெயர் மக்கள் முறைப்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். பிரபல சிங்கள வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குழந்கைகளுக்கான பால் மா உரிய முறையில் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உரிய முறையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு தீர்வுத் திட்டங்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படாத வரையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
|
| Sponsor |  | | Advertisements |
| (4ம் இணைப்பு) |
| ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது |
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45.22 PM ] [ ] |
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ] |
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்] |
| முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ] |
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ] |
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்] |
| புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ] |
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்] |
|
|