இந்த அகதிகள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் தான்ஜூங் பின்நாங் துறைமுகத்தில் அழைத்து வரப்பட்ட போதும் தரித்திருந்த கப்பலி;ல் இருந்து வெளியேற மறுத்துவந்தனர்.
இதனையடுத்து 4 முதல் 6 வாரங்களுக்குள் மீள்குடியமர்த்தப்படுவர் என்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் கப்பலில் இருந்து இறங்கினர். தற்போது இந்தோனிசியாவில் முகாமி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். .
இந்தநிலையில் இவர்களில் மூவரை பொறுப்பேற்க தாம் தயார் என நோர்வே அறிவித்துள்ளது. அதேபோல நியூஸிலாந்தும் அகதிகள் சிலரை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேலதிக அகதிகளை பொறுப்பேற்க முன்வரலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்த அகதிகளை பொறுப்பேற்பது தொடர்பில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவையின் அகதிகள் தெரிவு நடைமுறை பின்பற்றப்படுமானால், தாம் அகதிகளை பொறுப்பேற்க தயார் என நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமமந்திரி கெவின் ரூட் மற்றும் நியூஸிலாந்து பிரதம மந்திரி ஜோன் கே ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. நோர்வேயை பொறுத்த வரை அந்த நாடு நோர்வேயில் உறவுகளை கொண்ட மூன்று அகதிகளை பொறுப்பேற்க இணங்கியுள்ளது. |