|
|
|
| ஓசியானிக் கப்பல் அகதிகள் போன்று தாமும் நடத்தப்படவேண்டும்: மெரக் துறைமுக 254 அகதிகள் கோரிக்கை |
| [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2009, 04:40.21 PM GMT +05:30 ] |
ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து இலங்கை தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதை போன்று தம்மையும் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என இந்தோனிசிய மெரக் துறைமுகத்தில் தரித்துள்ள கப்பலில் இருக்கும் 254 இலங்கையர்களும் கோரியுள்ளனர். |
கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் இந்த துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறங்க மறுத்தநிலையில் தரித்துள்ளனர். இந்தக்கப்பலில் 31 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்களின் சுகாதார நலன்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஓசியானிக் வைக்கிங் கப்பலில் உள்ளவர்கள் மீள்குடியேற்றப்படுகின்றமையை போன்று தாமும் மீள்குடியேற்றப்படவேண்டும் என அகதிகளின் பேச்சாளரான அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் குணேந்திரராஜா கோரியுள்ளார்.
மெரக் துறைமுகத்தில் தரித்துள்ள கப்பலில் இருந்த ஒருவர் தனது தாயாருக்கு சுகவீனம் என்ற காரணத்தினால் இலங்கைக்கு சென்ற போது அங்கு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அலெக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தம்மை ஏதாவது ஒரு நாட்டில் மீள்குடியேற்ற இந்தோனேசிய அதிகாரிகள் முன்வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|