Switch to
   
   
   
செய்தி
  • Photo
கனடா முழுவதும் தமிழர் வாக்களிப்பை நோக்கி உணர்வு கலந்த உற்சாக எதிர்பார்ப்பு
[ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2009, 05:01.35 PM GMT +05:30 ]
எதிர்வரும் 19 ம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் கனடியத்தமிழருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழரின் நிலையான முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19 ம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததொன்று.

பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக்கழகங்கள், இளையோர் அமைப்புகள் என பல்வேறு தமிழ் சமூக அமைப்புக்களும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் தமிழர்கள் வாழும் நகரில் உள்ள அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் கனடியத் தமிழர் வாக்குக் கணிப்பு பற்றிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் வீடுகள் தோறும் நாட்டப்படும் பதாகைகள் இத்தேர்தலையொட்டி கனடியத்தமிழர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் நாட்டியுள்ளனர்.

தமிழ் ஊடகங்கள் குறிப்பாக வானொலி தொலைக்காட்சி என்பன இத்தேர்தல் பற்றி விசேட ஒலி ஒளி பரப்பை மேற்கொண்டவண்ணமுள்ளன. தமிழ் பத்திரிகைகள் இத்தேர்தல் பற்றிய செய்திகளுக்கு முக்கிய இடம்கொடுத்துள்ளன.

கனடாவில் வெளிவரும் முண்ணனித் தமிழ்ப்பத்திரிகையான ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை வெள்ளிக்கிழமை வரவேண்டிய பதிப்பு தேர்தலுக்காக, தேர்தலுக்கான விசேட பதிப்பாக வியாழனன்றே வெளிவந்துள்ளது. இப்பத்திரிகையில் தோதல் பற்றிய பூரண விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கனடா தழுவி 31 வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையாள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் மாதிரி வாக்களர் அட்டை என்பன உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் ஒன்று தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துண்டுப்பிரசுரத்தில் முக்கியமாக வாக்களிப்பதற்கு பதிவு அவசிமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே முன்பதிவு செய்யாதோர் தாம் பதிவு செய்யவில்லையே என்ற கவலையை விட்டு எவ்வித பதிவுகளுமின்றி வாக்களிக்கமுடியும்.

எதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

31 வாக்களிப்பு நிலையங்களில் 51 வாக்களிப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் http://www.tamilelections.ca/  ல் நீங்கள் பார்க்கலாம்.

வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள், வாக்களிக்கச் செல்லும்போது கொண்டுசெல்ல வேண்டிய அடையாள ஆவணங்கள் பற்றிய விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement