One moment please..
 
செய்தி
ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை நாடுவது ஏன்?
[ சனிக்கிழமை, 14 நவம்பர் 2009, 04:42.04 PM GMT +05:30 ]
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் இலங்கைக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து அவுஸ்திரேலியா போன்ற  நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று த அவுஸ்திரேலியன் இதழ் எழுதியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவுஸ்திரேலியா வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான இலங்கைத் தூதர் பாலித கோஹன கூறியிருந்தார்.

வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரை  இலங்கையை விட்டு வெளியேற்றியவர் பாலித கோஹன.

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் தமிழர்களை பாலித கோஹன இவ்வாறு தரம் தாழ்த்திப் பேசியதை வன்மையாகக் கண்டித்துள்ள டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்ம செல்லானி,  இலங்கை அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறுகிய பயண நேரத்தில் இந்தியாவை (தமிழ்நாட்டை) அடையும் பாதையில் உள்ள ஆபத்தின் காரணமாகத்தான் அவர்கள் தெற்காசிய நாடுகளை நாடிச் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

“முதலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளனர், இரண்டாவதாக, பால்க் நீரிணையை கடக்கும் படகுகளை இலங்கைக் கடற்படை தாக்குகிறது” என்று கூறியுள்ள பிரம்ம செல்லானி, “மீதமுள்ள விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில், அகதிகள் செல்லும் படகுகளை  இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர், அம்மக்களைக் கைது செய்கின்றனர், அவர்களின் படகுகளை அழிக்கின்றனர். இந்தக் காரணங்களால்தான் இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குத் தமிழர்கள் அகதிகளாகச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

அகதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தமிழர்கள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு  இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரம்ம செல்லானி கூறியுள்ளார்.

ஈழ தமிழர்கள் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பின் தெற்காசியப் பேச்சாளர் ஏரியான் ரிம் மேரி, “தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பது அல்ல, அவர்கள் தங்கள் வாழ்விடத்திற்கு அப்பால் சென்று பாதுகாப்புடன் வாழ ஒரு இடம் தேட வேண்டிய அவசியத்திற்கு உட்பட்டுள்ளார்கள் என்பதே முக்கியம்” என்று கூறியுள்ளார்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்