|
|
|
| முள்வேலி முகாம்களிலிருந்து தமிழர்கள் வெளியேறும் வரை போராட்டம் ஓயாது: விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் சீற்றம் |
| [ சனிக்கிழமை, 28 நவம்பர் 2009, 02:21.52 PM GMT +05:30 ] |
இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது இயக்குநர் சீமான் என்று கூறியுள்ளார் |
கனடாவின் ரொறன்ரோவில் நடந்த மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக சென்றிருந்த இயக்குநர் சீமானை அந்த நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர். பின்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் கூறினர். இதையடுத்து சீமான் சென்னை கிளம்பினார்.
இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்த சீமானுக்கு நாம் தமிழர் இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள் என பெரும் திரளானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கைகளில் பிரபாகரன் படங்களையும், விடுதலைப் புலிகளின் கொடிகளையும் ஏந்தி வந்து சீமானை வரவேற்றனர்.
மேலும் ஈழத்திற்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், பிரபாகரனை வாழ்த்தியும் கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன்.
கனடா நாட்டில் உள்ள எனது சகோதரர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அந்த நாட்டு பொலிஸார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர்.
மேலும் மாவீரர் தின கூட்டத்தில் என்னைப் பேசக்கூடாது என்றும், உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார் சீமான். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|