Switch to
   
   
   
செய்தி
இந்தோனேசியாவில் மரணமடைந்த இலங்கை அகதியின் சடலத்தை இலங்கை அனுப்பிவைக்க ஏற்பாடு
[ சனிக்கிழமை, 26 டிசெம்பர் 2009, 04:00.48 PM GMT +05:30 ]
இந்தோனேசியாவில் வைத்து மரணமடைந்த இலங்கை அகதியின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டியுகே பைசாஸ்யா இதனை தெரிவித்துள்ளார்.

அகதிகள் படகில் எஞ்சியுள்ளவர்களையும் நோய் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  எட்டு இலங்கை அகதிகள் மாத்திரமே தமக்கு மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர்கள் அகதிகளுக்கான கோரிக்கை விடுத்து தங்கியுள்ள நிலையில், அவர்களின் விடயங்களை இந்தோனேசிய கடற்படையினர் கையாள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை அல்லது, சர்வதேச அகதிகள் பராமரிப்பகத்தின் ஊடாக மாத்திரமே இந்த விடயங்களை கையாளலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே குறித்த இலங்கை அதிகள் மீது, இந்தோனேசிய கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement