புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் தமது அலுவல்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாக கூறியும், தற்போது இடம்பெறுவதாக கூறியும் பல்வேறு போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும் அவற்றை பொது மக்கள் நம்பக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை, அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள குடியமர்த்துவது தமது பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வடக்கின் இடம்பெயர்ந்தவர்களின் சொந்த இடங்களில் மாற்று பிரதேசத்தவர்கள் குடியமர்த்தப்படுவர் என யாரும் நம்பவேண்டாம் எனவும், அந்த பிரதேசங்களில் அவ்வாறான குடியேற்றங்கள் எவையும் நிகழாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
|