Switch to
   
   
   
செய்தி
கரூரில் இலங்கை அகதி முகாம் பெண், பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக தீக்குளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:29.04 PM GMT +05:30 ]
கரூர் அருகே ராயனூரில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்துள்ளார்.
கடந்த 2007 மே 17 ம் தேதி கரூர் அருகே உள்ள வடக்கு காந்தி கிராமத்தில் ராம் பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் ஒரு மர்ம கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பியது.

இந்த கொலை வழக்கில் கடந்த 3 வருடமாக தடயம், துப்பு, கிடைக்காமலும், கொலையாளிகளை பிடிக்க முடியாமலும், பொலிஸார் திணறி வந்தனர். இந்த நிலையில் கரூர் எஸ்.பியாக வந்த தினகரன் அதிரடியாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார், திருட்டு பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 07 ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து தனது வீட்டற்குள் சென்ற குமாரின் மனைவி பத்மாதேவி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் உடல் முழுவதும் கருகியது.

இதனையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த புகாரை பொலிஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement