அவர் நாளை ,வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்றமை தொடர்பில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் முகமாகவே பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரிக்கெட்ஸ், இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவுத்துறை உதவி செயலாளர் இலங்கை சென்றடைந்துள்ளார்
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர பிரதி செயலாளர் பீட்டர் ரிக்கெட்ஸ் நேற்று இரவு 10.45 அளவில் இலங்கையை சென்றடைந்துள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள இவர் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவை சந்தித்து பேச்சுவார்;த்தை நடத்துகிறார்.
லண்டனில் கடந்த மாதம் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்றமை தொடர்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட இராஜதந்திர முறுகல் குறித்தே இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. |