Switch to
   
   
   
செய்தி
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:31.46 AM GMT +05:30 ]
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல் காரர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து, அங்கு சென்ற 150வது படகாக நேற்று முன்நாள்  சென்ற படகு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்நாள்  கைது செய்யப்பட்ட நான்கு ஆட்கடத்தல் காரர்களும், குற்றவாளிகளாக கருதப்படமாட்டர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும், ஏனைய அகதிகளுடன் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் 'காப்பாற்றப்பட்ட கடற்பயணிகள்" என கருதப்படுவரே தவிர, சட்டவிரோத குடியேறிகள் என கருதப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் மூழ்கும் நிலையில் இருந்ததாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அது மூழ்கிய நிலையில் இருக்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆட்கடத்தல் காரர்களின் சூழ்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

(இந்தவேளையில், அண்மையில் பிரதமர் ஜூலியா கில்லாட்டின் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்த கருத்து முக்கியமானதாக நோக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேறிகளை தடுக்க நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் அதேநேரம் அதற்கு ஏற்ப கடத்தல்காரர்களும் தமது சூழ்ச்சிகளை மாற்றிக்கொள்வர் என்பதுவே அந்த கருத்தாகும்)

இதேவேளை அங்கு அவுஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட அகதிகளுக்கு, அது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும் பட்சத்தில், அவர்கள் சிறை வைக்கப்படுவர் என இராணுவத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முன்நாள்  மீட்கப்பட்ட அகதிகளில் அதிக அளவிலானவர்கள் இலங்கையர்கள் எனவும், பெரும்பாலும் அவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடைய ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், தமக்கு அகதிகளின் படகுகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும், அவர்கள் தமது நாடுகளில் இருந்து வெளியேறாமல் தடுப்பதே தமது எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே பிராந்திய ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement