மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-
கடந்த 25.07.2010ந் திகதி இரவு 8.45 மணியளவில் வெலிக்கடை சிறையிலுள்ள பெண்கள் பிரிவான எச் மற்றும் வை ஆகிய முகாம்களில் பெண்கள் நித்திரையில் இருந்தபொழுது விசேட சிறைக் காவலர்களான மூன்று பெண்களும் 18 ஆண்களும் திடீர் என உட்பிரவேசித்ததாகவும், அப்போது அரைகுறை ஆடைகளுடன் நித்திரையில் இருந்த அந்த பெண்கள் திடீர் என ஆண்கள் உள்நுழைந்ததால் செய்வதறியாது அவமானம் தாங்கமுடியாமல் இம்சைக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வந்த ஆண் காவலர்கள் பார்த்துக்கொண்டு நிற்க அந்த பெண் காவலர்கள் தங்களை பரிசோதனை செய்ததாகவும், இதனால் தாங்கள் அனைவரும் சொல்ல முடியாதளவுக்கு இம்சைப்படுத்தப்பட்டதாவும் அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் மூலமாக அறிய முடிகின்றது.
அத்துடன் இந்த பரிசோதனை நடவடிக்கை அதிகாலை ஒரு மணிவரை நீடித்ததாகவும் மேலும் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த இரு முகாமிலும் மொத்தம் 180 பெண் கைதிகள் இருப்பதாகவும் இவர்களில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 55 தமிழ் பெண் அரசியல் கைதிகளும் 5 குழந்தைகளும் இந்த முகாம்களில்தான் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். |