|
|
|
| Photo
|
|
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM GMT +05:30 ] | |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது |
வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிராக அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.
தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ. டி.எம்.பி.பி. வராவௌ மற்றும் இசெட் ரஸ்மி ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இதன் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் சாட்சிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை குற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், வீடியோ மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் என இன்றைய நீதிமன்ற அமர்வின் போது அரச தரப்பு சட்டத்தரணி சரத் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளார்.


|
|
|
|
| சித்திரவதைக்குள்ளான ஆரியவதிக்கு ஆவிப் பிரச்சினையாம்: சவூதி சென்ற குழுவினர் தகவல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.06 AM ] |
சவூதி அரேபியாவில் ஆணி அறையப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் ஆரியவதி தொடர்பில் தற்போது சவூதி அரேபியாவில் வேறு விதமான கருத்தே நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் பலி |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:54.35 AM ] |
கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இரண்டு உயர்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM ] |
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார். [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| வெற்றிச்சரிதம் படைக்க ஜேர்மனியில் ஒன்றுதிரளட்டும் உலகத்தமிழினம் - வைகோ |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:27.27 AM ] [ ] |
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜேர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு வைகோ விடுத்துள்ள வாழ்த்தறிக்கை. [மேலும்] |
| உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ] |
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்] |
|
|
| advertisement |
|
|