Switch to
   
   
   
செய்தி
உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் இணையத்தளம் தடை
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 02:43.24 AM GMT +05:30 ]

தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறியமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைளில் உண்மைத்தன்மை, நடுநிலைமை தவறாமல் செயற்பட்டவரும் கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்ஷி இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூடிய விரைவில் இந்த நிலைமையை சரி செய்து தகவல் அறியும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு நடந்துமுடிந்த பல தேர்தல்களின் போதும் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. முதன் முறையாகவே ஃபொரொக்ஷி இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடுவது தடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட இணையத்தளமான கபே இணையத்தளத்திற்கு இயற்கையாக குறுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது திட்டமிட்டதும் மிகவும் நுட்பமான முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தடை என கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் மோசடிகள், முறைகேடுகள், வன்முறைகள், தேர்தல் சட்டங்களை மீறியமை, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் வாக்காளர்களைத் தெளிவுபடுத்துவதற்காக கபே அமைப்பு இந்த இணையத்தளத்தை ஆரம்பித்தது. இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத சிலர் இதற்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த சீர்குலைப்பு நடவடிக்கையைத் தடுப்பதற்காக கபே அமைப்பு தனது உச்ச சக்தியைப் பயன்படுத்தி மீண்டும் இணையத்தளத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement