அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
பயங்கரவாதமும் புலிகள் இயக்கமும் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பிரபாகரனின் இரும்பு சப்பாத்து பிடியில் மூன்று தசாப்த காலங்களாக சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் அவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழர்களில் சகலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை எதிர்க்கவில்லை பலர் ஒத்துழைப்பு நல்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களே அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) ஒத்துழைப்பு நல்கிவருகின்றார். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவரே சர்வதேச ரீதியில் நிதி திரட்டுபவராக இருந்தார் அந்த காலத்தில் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகளையும் ,ரவைகளையும், வெடிமருந்துகளையும், கப்பல்களையும் கொள்வனவு செயற்வதற்கே அவர் உதவினார்.
தற்போதைய சூழ்நிலையில் அவர் அழிவுகளுக்கு அல்லாமல் ஆக்கத்திற்கான உதவிகளை செய்து வருகின்றார் மீள் நிர்மாணக் கட்டமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவர் உதவிவருகின்றார். அரசியல் ரீதியாகவே அவர் உதவிகளை செய்து வருகின்றார்.
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரை சாட்சியாக மாற்றும் உரிமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. சட்டத்திலும் அதற்கு இடமிருக்கின்றது. அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை . சட்டமா அதிபர் அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றார் சட்டத்தை எம்மால் தீர்மானிக்க முடியாது நீதிமன்றமே அதனை தீர்மானிக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில வேலைகளில் கபரகொய்யாவும் உடும்பாகலாம்.
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே கே.பி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிவருகின்றார் அதில் எவ்விதமான பிரச்சினையும் இறைமைக்கும் அகௌரவமும் இழுக்கும் ஏற்படாத வகையில் அரசியலமைப்பின் கீழ் நாம் செயற்பட்டு வருகின்றோம். |