Switch to
   
   
   
செய்தி
இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம்; சிறுபான்மையினர் எம்முடன் வாழலாம் - இராணுவத் தளபதி
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:04.14 AM GMT +05:30 ] [ தினக்குரல் ]
இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம்.  சிறுபான்மையினர் எம்முடன் வாழ முடியும். இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் நாட்டை சிறுபான்மையினரான தமிழர்கள் துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டார்களென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா  கூறியுள்ளார்.

கனடாவில் "நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ருவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யுத்தம் ஒருவருடத்திற்குள் முடிவடைந்து விடுமென தான் கருதுவதாகவும்  இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளதாகவும்  எமக்கு வழங்கப்பட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாயகத்தை விரும்பும் தமிழர்கள் யுத்தத்தை முன்னெடுத்து அதற்கான இடமாக இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாக கருதும் ஜெனரல் பொன்சேகா, இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் நாட்டை சிறுபான்மையினரான தமிழர்கள் துண்டாட ஒரு போதும் இடமளிக்க மாட்டார்களெனக் கூறியுள்ளார்.

மூன்று தசாப்தகாலமாக இராணுவத்தில் சேவையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பொன்சேகா இந்த நாடு சிங்களவருக்கு சொந்தமானதென உறுதியாக நம்புகிறேன். ஆனால்  இங்கு சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. எமது மக்கள் போன்றே நடத்துகின்றோம். நாம் நாட்டின் பெரும்பான்மையினர் 75% மாகவுள்ளோம். அதனை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எமக்கு உண்டு. நாங்கள் வலிமையான தேசம். அவர்கள் எம்முடன் வாழ முடியும். ஆனால்  சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

படையினரின் நடத்தை தொடர்பாகச் சர்வதேச மனித உரிமை குழுக்களின் விசனத்தை அவர் நிராகரித்துள்ளார்.

யுத்தத்தில் பொதுமக்கள் மரணங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்று கூறும் அவர் இலங்கை மோதலில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே போரில் சம்பந்தப்படாதவர்கள் இறந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

புலிகளிடம் 4 ஆயிரம் பேரே இருப்பதாகக் கூறியுள்ள இராணுவத் தளபதி இலங்கைப் படையில் 2 1/2 இலட்சம் பேரும் நிரம்ப ஆயுதங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காட்டுக்குள் ஒவ்வொரு அங்குல இடத்திலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி கண்ணி வெடி அகற்றும் பணிக்குக் குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement