|
|
|
| புலிகள் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழிகளில் முனைப்பு: ரோஹித போகொல்லாகம |
| [ செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2010, 10:51.48 AM GMT +05:30 ] |
இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு வேறு வழிகளில் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். |
புலிகளின் நடவடிக்கைகள் குறித்து மாலைதீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அஹமட் சாஹீதைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்தார்.
குறிப்பாக இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வைற் கொலர் (கனவான்களைப் போன்று) சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகவூம் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|