Switch to
   
   
   
செய்தி
அமைச்சர் கருணாவின் ஆதரவு மாணவர்களின் அழுத்தம்: கிழக்கு பல்கலை. உபவேந்தர் பதவி விலகினார்
[ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 08:45.58 AM GMT +05:30 ]
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் நேற்று தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில், அமைச்சர் கருணாவின் ஆதரவு மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பத்மநாதன் பதவிவிலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவரது பதவிவிலகலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பதில் உபவேந்தராக கே. பிரேமகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

மாணவர் குழு ஒன்று வந்து முன்னர் சிங்கள மாணவர் ஒருவரின் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தம்மை பதவிவிலகுமாறு கோரியதாக  முன்னாள் உபவேந்தர்  என். பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாம் நேற்று தமது பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில், அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையின் ஒரு கட்டமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் அமைச்சர் கருணாவின் ஆதரவு மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பத்மநாதன் பதவிவிலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே  முன்னாள் உபவேந்தர் எம் மூக்கையாவும் இவ்வாறான தனிப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே தமது பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement