Switch to
   
   
   
செய்தி
ஈழத்தமிழர் வாழ்வுரிமையை காக்க சென்னையில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 09:55.00 AM GMT +05:30 ]
தமிழ்நாடு சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.00மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை நடந்த இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பல கலைஞர்கள் எழுச்சியோடு கலந்து சிறப்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையேற்று நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைத்து வரும் பழ.நெடுமாறன் உட்பட கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில்

கவிஞர் பொன். செல்வகணபதி

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

தமிழறிஞர்களான கி.த.பச்சியப்பன், நா. அரணமுறுவல், முனைவர் தமிழப்பன், பேராசிரியர் யோகீஸ்வரன், நாடக ஆசிரியர் ந.முத்துசாமி, பேராசிரியர் மே.து.இரா.சுகுமார், பேராசிரியை சரஸ்வதி இராசேந்திரன், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது

உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.ஜனார்த்தனம்

ம.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா

சிறிலங்காவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளின் கையெழுத்து பெறப்பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

01. ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்து வருவதையும், படைப்பயிற்சி அளித்து வருவதையும் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அரசு நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அனுப்பியுள்ள பயிற்சியாளர்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் ஒருமனதாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

02. சிறிலங்கா அரச இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் ஈழத்தமிழ் மக்களுக்கும், அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் மக்களிற்கும் டில்லி மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்ப் படைப்பாளிகள் ஒருமனதோடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இரண்டு தீர்மானங்களும் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement