Switch to
   
   
   
செய்தி
நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் மீள அழைப்பு
[ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 08:11.49 AM GMT +05:30 ]
இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களை அரசாங்கம் மீள அழைத்துள்ளது. அவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் அவர்களுக்காக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த ஊடகவியலாளர்களின் சேவை தற்போது அரசாங்கத்துக்கு தேவைப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தின் பல்வேறு பணிகளை முன்னெடுக்கவும், அவற்றை விஸ்தரிக்கவும், நாடு கடத்தப்பட்ட மற்றும் நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி, தம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுவார்கள், எனவே அதனால் எந்த பயனும் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஊடகவியலாளர்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் நாட்டுக்கு அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுத்தமையினாலேயே இம்முடிவை எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். என தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
advertisement