|
|
|
| சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32.34 AM GMT +05:30 ] |
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். |
இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இலங்கையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பாக கனடியத் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் எந்தவொரு குழுவிற்கும் சாட்சியங்களை அளிப்பதற்குத் தான் தயாராக உள்ளதாக அறிவித்த பின்னர் பொன்சேகாவின் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “எந்தவொரு விசாரணைகளிற்குச் செல்லவும் சாட்சி வழங்கவும் நான் தயாராக உள்ளேன்… யாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தால் அவர்கள் எவரையும் நான் காப்பாற்றப் போவதில்லை. யாரும் போர்குற்றம் புரிந்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதானது தேசவிரோதமாகும்”
“சரத் பொன்சேகாவினது கைதானது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமானது எவ்வகையான அடக்கு முறைகளையும் பிரயோகிக்கத் தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது,” இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இக்கைது நடவடிக்கையானது, இலங்கை எவ்வளவு விரைவாக பர்மா மற்றும் ஈரான் போன்று அடக்குமுறை அதிகாரமையமாக மாறுகின்றது என்பதனைக் காட்டுகிறது.
“சர்வதேச சமூகத்தினது மென்போக்கான இராஜதந்திர நடவடிக்கையானது இலங்கை அரசினது ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பின் மூலம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளது” இவ்வாறு பூபாலபிள்ளை தெரிவித்தார். “இன்றைய இலங்கையானது, மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்குதல், காணாமல் போதல் அல்லது சிறைப்பிடிக்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்ற ஆர்வெலியன் போன்று உள்ளது. முனித உரிமைகள் எனும் விடயம் வரும் போது சதாம் உசைன் மற்றும் ஸ்லொபடோன் மெலோசவிக் போன்றவர்களின் வரிசையில் ராஜபக்சவும் சேருகின்றார்.
“சர்வதேச சமூகமானது உண்மையில் இலங்கையில் ஜனநாயம், ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் ஆகியவற்றைக் காண விரும்பினால், அவர்கள் மிக முக்கியமாக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளையும் இலங்கை மீது விதிப்பதனைக் கருத்தில் எடுக்கவேண்டும். சிம்பாப்பே நட்டினை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றியது போல் இலங்கையினையும் வெளியேற்றுவதற்குக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். |
|
|
|
| வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ] |
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] [ ] |
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்] |
| ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] [ ] |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்] |
| தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] [ ] |
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்] |
| வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] [ ] |
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்] |
|
|
| advertisement |
|
|