எனது கணவர் கைதாகவில்லை, கடத்தப்பட்டுள்ளார்! கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்: அனோமா பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 11:04.23 AM GMT +05:30 ]
எனது கணவர் கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டிருக்கிறார். ''முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது" என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
"எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை" என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
அதேவேளை எனது கணவருக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒருதடவை உட்கொள்ள வேண்டிய மருந்துகளை வழங்குமாறு அவரது மனைவி அனோமா பொன்சேகா, அனுமதி கோரியுள்ள போதிலும் அந்தக் கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் காரணமாக வாழ்நாள் முழுவதும் இந்த மருந்தகளை உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
அத்துடன், 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மருந்து தொடர்ச்சியாக உட்கொள்ளாமல் விட்டால் அவருக்கு, பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என வைத்தியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்.
ஏபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன்.
நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.
எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்.
எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை. யாரிடம் போய் உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. யாராவது எனது குமுறலைக் கேட்டு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது கணவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் அனோமா.
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]