செய்தி
பம்பலப்பிட்டிக் கடலில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞரின் இறுதிக் கிரியை நாளை
[ சனிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2009, 03:06.24 PM GMT ]
பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் நாளை அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் சிவகுமாரனின் தந்தை பாலவர்ணன் தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸ் தரப்பில், "மேற்படி கொலை தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய கன்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கின்றது.

மரணம் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும். நீதிமன்ற உத்தரவையடுத்து, விசாரணைகள் தொடரும்" எனக் கூறப்பட்டது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 30-05-2015, 01:29.29 AM ]
நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-05-2015, 01:21.18 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்காக என் மீதே சேறு பூசப்படுகின்றது என மஹிந்தவின் முன்னாள் பிரதம ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-05-2015, 01:16.21 AM ]
கடந்த ஒன்பது வருடங்களில் 5626 பேருக்கு இராணுவ நீதிமன்றின் ஊடாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 30-05-2015, 12:49.47 AM ]
வழக்கு விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட காலம் போய், தற்போது தண்டித்து அதன் பின்னர் வழக்கு விசாரணை நடத்தப்படும் ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-05-2015, 12:42.44 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகி விட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
[ Saturday, 30-05-2015 00:26:04 GMT ]
ரஷ்யாவில் பெண் ஒருவர் கைத்துப்பாக்கியுடம் செல்பி எடுக்கும்போது எதிர்ப்பாராத விதமாக நெற்றியில் குண்டுபாய்ந்தது
[ Friday, 29-05-2015 13:49:43 GMT ]
உத்தர பிரதேசத்தில் மணமகனின் தந்தை மணமகளின் தங்கையை முத்தமிட்டதால் கல்யாணத்தையே நிறுத்திய மணமகளால் கல்யாண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[ Friday, 29-05-2015 12:17:56 GMT ]
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளட்சரின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது.
[ Friday, 29-05-2015 14:17:32 GMT ]
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 29-05-2015 23:23:01 ]
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன்.