பல பிரதேசங்களை வாட்டும் கடும் குளிர் காலநிலையால் ஆபத்து!

Report Print Nivetha in காலநிலை

நாட்டின் பல பிரதேசங்களில் அதிக குளிர் காலநிலை நிலவிவருவதால் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த காலப் பகுதியில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அறியவந்துள்ளது.

இதன் காரணமாக அவதானமாக இருக்குமாறு குடும்ப சுகாதார பணியகம் மக்களை வேண்டியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் குளிர் காலநிலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்கள் தமது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை இந்த கடுமையான குளிர் காலநிலையிலிருந்து சரியான முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

Comments