எச்சரிக்கை: இலங்கையில் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம்

Report Print Sujitha Sri in காலநிலை

இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பிற்பகல் 2.00 மணிக்கு பின் இடி, மின்னலின் தாக்கம் கடுமையாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த வகையில் 34 பாகை செல்சியஸிற்கும் அதிகரித்த வெப்பம் நிலவும் எனவும், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடி, மின்னல் தாக்கம் காணப்படும் சந்தர்ப்பத்தில் கடும் காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும், பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments