வறட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு தண்ணீர்

Report Print Steephen Steephen in காலநிலை

நாட்டில் நிலவும் வறட்சியாக நிலைமை காரணமாக வில்பத்து தேசிய வன பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தண்ணீர் தடாகங்களில் கொள்கலன் வண்டிகள் மூலம் தண்ணீரை நிரப்ப வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வறட்சி காரணமாக வில்பத்து வனத்தில் உள்ள ஈரப்பதனான பகுதிகள் அனைத்தும் வறட்டுள்ளன. இதனால், யானைகள் உட்பட வன விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வனத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தண்ணீர் தடாகங்களில் நீரை நிரப்பி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்ந்தும் வறட்சி நீடித்தால், வன விலங்குகள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments